கொவிட் – 19 தடுப்பு மருந்து கொள்வனவுக்காக, உலக வங்கியிடமிருந்து கடன் பெற, அரசாங்கம் பேச்சுவார்த்தை

🕔 December 20, 2020

கொவிட் – 19 தடுப்பு மருந்தை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்த 10 பில்லியன் ரூபா கடனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்வார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என, சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பெரும்பாலானோருக்குத் தேவையான தடுப்பு மருந்துகளை வாங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிலிருந்து இலகு கடன்களைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானோருக்கு கோரோனா தடுப்பு மருந்தை வழங்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் சர்வதேச முயற்சியின் கீழ் உறுதி வழங்கப்பட்டுள்ளது.

உலக வங்கியுடனான பேச்சுவார்த்தைகளைத் தவிர, தடுப்பு மருந்தை வாங்குவதற்கான மானியங்களைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசாங்கம் கவனித்து வருகிறது என, மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறைகள் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார் எனவும் சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்