இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்களை, சீனாவுக்கு இலங்கை திருப்பி அனுப்புகிறது

🕔 December 17, 2020

சீனாவிலிருந்து இலங்கைக்கு 48 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்கள் மீண்டும் சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளன.

இலங்கை தர நிர்ணய சபை – இந்த டின் மீன்களை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மீன்கள் அடைக்கப்பட்ட டின்களுக்குள் மனித பாவனைக்கு பொருத்தமற்ற ‘ஆர்சனிக்’ ரசாயனம் காணப்படுவதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ள டின் மீன்கள் 768 மெட்றிக் தொன் எடையுடையவை என்றும், அவற்றின் பெறுமதி 384 மில்லியன் ரூபா எனவும் தெவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்