விமாப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம், கந்தளாயில் விபத்து

🕔 December 15, 2020

லங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானமொன்று கந்தளாயில் விபத்துக்குள்ளானது.

பி.ரி – 6 எனும் விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

கந்தளாய் – சூரியபுர பகுதியில் இன்று செவ்வாய்கிழமை மேற்படி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலை – சீனன்குடாவில் இருந்து புறப்பட்ட பி.ரி – 6 எனும் விமானமானது, பயிற்சி விமானி ஒருவருடன் விபத்துக்குள்ளானதாகவும், கந்தளாய் – ஜனரஞ்சன வேவா அருகே வீதியொன்றின் அருகில் மேற்படி விமானம் தரையிறங்கியுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் உள்ள சீனன்குடா தளத்திலிருந்து புறப்பட்ட விமானத்துடனான தொடர்பை இழந்துவிட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

Comments