வாகன இலக்கத் தகடுகளில் மாகாணத்தை குறிக்கும் எழுத்துக்களை நீக்க அனுமதி

🕔 December 15, 2020

வாகன இலக்கத் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும் எழுத்துக்களை அகற்றுவதற்காக முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் வாகனங்கள் பதிவு செய்யப்படும்போது, ​​அவற்றுக்கு தனிப்பட்ட எண்கள் வழங்கப்படுகின்றன. இதனால் வாகனத்தை திணைக்களத்தின் தரவுத்தளத்தின் மூலம் அடையாளம் காண முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய முறையின்படி, ஒவ்வொரு முறையும் மாகாணங்களுக்கு இடையில் வாகனங்கள் மாற்றப்படும் போது, இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியதில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்