‘நியாயமான விடயங்களை முன்வைத்துள்ளார்’: அலிசாஹிர் மௌலானாவின் ராஜிநாமா குறித்து ஹக்கீம் கருத்து

🕔 December 7, 2020

ரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் ஆராய்வதற்கு, கட்சியின் உயர்மட்ட குழுவும் அதி உயர் பீடமும் கூடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆராய்ந்த பின்னர் அடுத்த கட்ட முடிவு குறித்து கட்சி தீர்மானிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ராஜிநாமா செய்வதற்கு எடுத்த முடிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள மு.கா. தலைவர் ஹக்கீம்; ” அவரின் கடிதம் கிடைத்துள்ளது. நியாயமான விடயங்களை அவர் முன்வைத்துள்ளார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மக்கள் மீதும் சமூகம் மீதும் கரிசனை இல்லாத நிலையில், அந்தக் கட்சியில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்று தெரிவித்திருந்த அலிசாஹிர் மௌலானா, மு.காங்கிரஸ் உறுப்புரிமையிலிருந்து ராஜிநாமா செய்திருந்தார்.

மேலும் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்த மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, கட்சி நடவடிக்கை எடுக்காமை குறித்தும் அவர் விசனம் தெரிவித்திருந்தார்.

செய்தி மூலம்: தினகரன் இணையம்

தொடர்பான செய்தி: முஸ்லிம் காங்கிரஸில் இருந்து, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ராஜிநாமா; ஹக்கீமுக்கு கடிதம் மூலம்அறிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்