மனநோய் சிகிச்சைக்கான மருந்துகள், வன்முறை நடத்தைகளை ஏற்படுத்தாது: பொலிஸ் பேச்சாளரின் கருத்துக்கு வைத்தியர்கள் சங்கம் பதில்

🕔 December 4, 2020

னநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளினால் வன்முறை நடத்தைகள் ஏற்பட மாட்டாது என இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம் (Sri Lanka College of Psychiatrists) அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

மனநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளை கைதிகள் பயன்படுத்தியமையே, மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை நடத்தைக்கு காரணம் என கூறுவது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாக அமையும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்து மக்கள் மத்தியில் மனநோய் மற்றும் அது தொடர்பான சிகிச்சைகள் குறித்து தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதாகவும் இலங்கை மனநோய் வைத்தியர்கள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

மஹர சிறைச்சாலையிலுள்ள மருந்தகத்திலிருந்து மனநோய் சம்பந்தமான நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 21,000 மாத்திரைகள் சில கைதிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவே சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததென்றும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்