ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்தது

🕔 November 24, 2020

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணையை மேன்முறையீட்டு நிதிமன்றம்ட ரத்துச் செய்துள்ளது,

லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகிய மனித உரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் காணாமல் போனமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

மேற்படி இருவரும் சர்வதேச மனித உரிமைகள் தினத்துக்கு முந்தைய நாளொன்றில் 09 டிசம்பர் 2011ஆம் ஆண்டு காணாமல் போயினர். இவர்கள் இறுதியாக யாழ்ப்பாணம் – கைதடி பிரதேசத்தில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அவர்களின் உறவினர்களால் ஆள்கொணர்வு மனு 2012ஆம் ஆண்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து அந்த விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு, சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சாட்சிகளை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் 2012 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகியிருந்தன.

இந்த நிலையில் சாட்சியம் ஒன்றினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 2019ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்