வாழைச்சேனையில் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள், அரச அச்சகக் கூட்டுத்தான பயன்பாட்டுக்கு வழங்கி வைப்பு

🕔 October 29, 2020

– அஷ்ரப் ஏ சமத் –

வாழைச்சேனை காகித ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகுதி கடதாசியினை, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

தகவல்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவிடம் கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, இந்த கடதாசி தொகுதியை நேற்று வழங்கி வைத்தார்.

அரச அச்சக கூட்டுத்தபானம் அச்சிடும் பத்திரிகைகளுக்கு இக் கடதாசிகள்  பயன்படுத்தப்படவுள்ளன.

மூன்று தசாப்த கால யுத்தத்தினால் இத் தொழிற்சாலை  மூடப்பட்டிருந்தது.

இதனால் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தமது தொழில்களை இழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி – கைத்தொழில் துறை  அமைச்சர் விமல் வீரவன்ச, வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலையை மீள ஆரம்பித்து வைத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்