கோணாவத்தை ஆறு அபகரிப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்தும் ‘ஏ.டி.எஸ்’ முக்கியஸ்தர்: வேலியே பயிரை மேயும் அவலம்

🕔 October 15, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை – கோணாவத்தை ஆறு சட்ட விரோதமாக அபகரிக்கப்படுவதற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு தடையாக, ஏ.டி.எஸ் (ADS) என அழைக்கப்படும் ‘அட்டாளைச்சேனை அபிவிருத்தி குழு’ (Addalaichenai Development Society) முக்கியஸ்தர் ஒருவர் செயற்பட்டு வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது.

அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கோணாவத்தை ஆற்றின் இரு கரைகளையும் மூடி, வேலியிட்டு அடைத்து – சட்ட விரோதமாக அபகரித்துள்ள நபர்களுக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்ட வேளை, அம்முயற்சியைக் கைவிடுமாறு, அட்டாளைச்சேனை அபிவிருத்தி குழு முக்கியஸ்தர் ஒருவர், காணிப் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கடுமையான அழுத்தம் கொழுத்துள்ளார்.

‘அட்டாளைச்சேனையின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதற்காக’ எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட ‘அட்டாளைச்சேனை அபிவிருத்தி குழு’வின் முக்கியஸ்தர் ஒருவர், அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள மிகப் பெரும் இயற்கை வளமொன்று சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதற்கு ஆதரவாக – இவ்வாறு செயற்படுகின்றமை அதிர்ச்சியளிக்கும் விடயமாகும்.

கோணாவத்தை ஆற்றின் இரு கரைகளையும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளவர்களில் அரசியல்வாதிகள், அரச உத்தியோகத்தர்கள், தனவந்தர்கள் மற்றும் முக்கியமான பதவிகளில் உள்ளோரும் உள்ளடங்குகின்றனர்.

கோணாவத்தை ஆறு அபகரிக்கப்படுவதற்கு எதிராக அரச தரப்பு மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு தடையை ஏற்படுத்தும் வகையில், எதிர்காலத்தில் யாராவது நடந்துகொள்வார்களாயின், அவர்கள் பற்றிய முழு விவரங்களுடன் ‘புதிது’ செய்தித்தளத்தில் செய்தி வெளியிடப்படும்.

தொடர்பான செய்தி: அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆறு: அபகரிப்பை தடுத்து நிறுத்துமாறு, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் வேண்டுகோள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்