பிரதமர் அலுவலகப் பிரதானியாக யோசித ராஜபக்ஷ நியமனம்

🕔 October 16, 2020

பிரதமர் அலுவலகப் பிரதானியாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கைக்கான சீன தூதரகம், யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

சீன தூதரகம், தனது ருவிட்டர் பக்கத்தின் ஊடாக யோசித ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையின் அதிகாரியாக யோசித ராஜபக்ஷ பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments