ஆடை விவகாரம்: நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்டார் அதாஉல்லா

🕔 September 22, 2020

நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணாக ஆடை அணிந்து வந்தார் எனும் குற்றச்சாட்டினை அடுத்து, தேசிய காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா, இன்று சபை அமர்விலிருந்து வெளியேற்றப்பட்டார்.

நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு பொருத்தமற்ற உடையில் அதாஉல்லா வருகை தந்துள்ளார் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபாநாயகரிடம் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, அதாவுல்லா அணிந்திருப்பது அவரது தேசிய உடை என கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா பக்கம், நாடாளுமன்றத்தின் கெமராக்கள் திருப்பப்படவில்லை என்பது குறித்து எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை முன்வைத்தனர்.

இதன் போது பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்; “ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வருகின்றமை போல், நாடாளுமன்றுக்கு அதாஉல்லா வந்துள்ளார் என குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் எதிர்கட்சியால் கடுமையாக விவாதிக்கப் பட்டதை அடுத்து நாடாளுமன்றில் இருந்து அவசரமாக அதாவுல்லா அங்குள்ள ஊழியரால் வெளியேற்றப் பட்டார்.

அதாஉல்லா இன்று அணிந்திருந்த வகை ஆடைகளையே அதிகமாக விரும்பி அணிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்