தலைப்புச் செய்திகள்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவுக்கு, அமைச்சரவை அனுமதி

ரசியலமைபில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான 20ம் திருத்தச் சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியள்ளது.

அரசியலமைப்பின் 19ம் திருத்தத்தை 20ம் திருத்தத்தினால் மாற்றுவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதியளித்திருந்தது.

இதன்படி நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு – சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அதனை நாடாளுமன்றத்தின் விஷேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த வரைவுக்கு அனுமதி வழங்கப்பட்டதுடன் அதனை வர்த்தமானியில் அறிவிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.