அம்பாறை மாவட்ட கடற்பரப்பிலிருந்து 38 மைல் தொலைவில் பயணித்த கப்பலில் தீ விபத்து
அம்பாறை மாவட்டம் சங்கமன் கண்டி கடற் பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கப்பல் பனாமாா அரசுக்குச் சொந்தமானது என தெரிய வருகிறது.
கப்பலின் எஞ்ஜின் அறையில் ஏற்பட்டுள்ள தீ பரவலே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கப்பலில் 23 பேர் கொண்ட குழுவினர் இருப்பதாகவும் அவர்களின் உதவிக்காக இலங்கை கடற்படையின் மூன்று கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.