திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் முஸ்லிம் எம்.பி.கள் மன்சூர், நசீர் தோல்வி

🕔 August 7, 2020

திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகித்த இரண்டு முஸ்லிம்கள் இம்முறை தோல்வியடைந்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.ஐ.எம். மன்சூர் மற்றும் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம். நஸீர் ஆகியோரே, இவ்வாறு தோல்லியடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் திகாமடுல்ல மாவட்டத்தில் தொலைபேசிச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் பைசல் காசிம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இவர்களில் எச்.எம்.எம். ஹரீஸ் 36,850 வாக்குகளையும், பைசல் காசிம் 29,423 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளனர். அதே கட்சியில் மூன்றாமிடத்துக்கு வந்து தோல்வியுள்ள ஏ.எல்.எம். நஸீர் அண்ணளவாக 26 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதேவேளை, திகாமடுல்ல மாவட்டத்தில் கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்த கே. கோடீஸ்வரனும் இம்முறை தோல்லியடைந்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்