சுவரொட்டி மற்றும் பதாதைகளை அகற்ற ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகை ஒதுக்கீடு

🕔 July 6, 2020

பொதுத்தேர்தல் காலங்களில் காட்சிப்படுத்தப்படும் பிரச்சார பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்காக பொலிஸ் தலைமையகத்துக்கு 07 கோடியே 58 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையக தகவல்களின் படி பிரச்சார சுவரொட்டிகளை அகற்ற 1539 தொழிலாளர்கள் பொலிஸ் நிலையங்களின் மட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பொலிஸ் அதிகாரிகளுடன் சேர்ந்து வேட்பாளர்களின் பதாகைகளையும் அகற்றி வருகின்றனர்.

சுவரொட்டி மற்றும் பதாதைகளை பொது இடங்களில் காட்சிப்படுத்துவது சட்ட விரோமான செயற்பாடாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்