ஏழு மணித்தியாலம் காத்திருக்க வைத்தனர், உள ரீதியாக பாதிக்கப்படுகிறேன்; மனவேதனைப் படுகிறார் மஹிந்த

🕔 October 30, 2015
Mahinda - 0134னாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிப்பதற்கு நேற்று வியாழக்கிழமை, தான் வருகை தந்து, ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசனம் தெரிவித்துள்ளார்.

பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளிப்பதற்கு, நேற்று வியாழக்கிழமை மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்தார்.

இதற்கிணங்க,நேற்று முற்பகல் 10.00 மணியளவில் தனது சட்டத்தரணிகளுடன் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு காரியாலயத்திற்கு மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார்.

எனினும், ஏழு மணித்தியாலங்கள் தான் வாக்கு மூலம் வழங்குவதற்காகக் காத்திருந்தாக அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

“நானும் எனது சட்டத்தரணிகளும் முழு நாளும் இங்கு காத்திருந்தோம். எங்களின் கால நேரம் வீணாகியது. இதனால், நான் உளரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றேன். என்னைப் பழிவாங்கும் நோக்கில்தான் தொடர்சியாக இவ்வாறு செய்யப்படுகிறது.

வெறுமனே எனது காலத்தை விரயமாக்குகின்றனர். இது இவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நான் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் பற்றி விசாரணைகள் நடத்தப்படவில்லை.

நான் எவ்வித கொடுக்கல் வாங்கல்களையும் மேற்கொள்ளவில்லை. ஆனாலும், தொடர்ச்சியாக ஆணைக்குழு முன்னால் நான் ஆஜராகி வருகிறேன்” என்று, விசாரணைக் குழுவின் பணிகள் நிறைவடைந்த பின்னர் வெளியேறி வரும்போது, அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்