தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு; மு.கா. தலைவர் பிரதம அதிதி

🕔 October 30, 2015

– எம்.வை. அமீர், சுலைமான் றாபி –Arif samsudeen - 01243

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் அமைப்பான, இளைஞர் காங்கிரசினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு’ எனும் தலைப்பிலான இளைஞர் மாநாடு, நாளை சனிக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக, கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக, மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளார்.

இது குறித்து மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் மேலும் தெரிவிக்கையில்;ளூ

“மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் நமது சமூகத்துக்கு ஆற்றிய அளப்பெரிய சேவைகள், அவர் காட்டிய வழி முறைகள் மற்றும் முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை பெற்றுத்தந்தமை போன்ற விடயங்களை இப்போதைய இளைய சமூதாயத்துக்கு புரிய வைக்க வேண்டியுள்ளது.

மேலும், தற்போதைய இளைஞர்களை, சமூக உணர்வாளர்களாகவும், முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தக் கூடியவர்களாகவும் உருவாக்க வேண்டிய தேவையுமுள்ளது.

இவற்றினை மையமாகக் கொண்டும், குறிப்பா சிறுபான்மையினரின் அரசியலில் முஸ்லிம்களின் வகிபாகத்தினைத் தக்க வைப்பது எவ்வாறு என்பதை அலசி ஆராயும் நோக்கிலும் மேற்படி இளைஞர் மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த மாநாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட 10 துறைகளில் சாதனை படைத்த இளைஞர் யுவதிகள் ‘லீடர் அஷ்ரப் ஞாபகார்த்த விருதுகள்’ வழங்கி வைக்கப்படவுள்ளனர்.

இளைஞர் காங்கிரஸ் வரலாற்றில் முதற்தடவையாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள 204 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து, ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் 05 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களில் 18 வயது தொடக்கம் 30 வயதுக்குட்பட்ட சிலருக்கு மேற்படி விருதுகள் வழங்கப்படவுள்ளன” என்றார்.

Comments