அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக புண்ணியமூர்த்தி கடமையேற்றார்

🕔 June 11, 2020

– எம்.ஜே.எம். சஜீத் –

ட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் 05வது  பீடாதிபதியாக கே. புண்ணியமூர்த்தி நேற்று புதன்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். 

இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தரம் – 01ஐ சேர்ந்த  புண்ணிமூர்த்தி, பொதுச்சேவை ஆணைக்குழுவின் நியமனக் கடிதத்தின் பிரகாரம் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதியும் தற்போது மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் பீடாதிபதியாக கடமையேற்றிருப்பவருமான எம்.ஐ. எம். நவாஸ். அட்டாளைச்சேனை தேசியக் கல்விக் கல்லூரியின் நிதி மற்றும் நிருவாகத்துக்கு பொறுப்பான உப பீடாதிபதி யு.எல்.எம். புகாரி, கல்விக்கான உப பீடாதிபதி ஏ. பாறூக், தொடருறு கல்விக்கான உப பீடாதிபதி எம்.ஐ. ஜஃபர் மற்றும் இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு புதிய பீடாதிபதி வரவேற்றனர்.

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் கல்விசாரா உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எவ்வாறாயினும், அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியில் பணியாற்றிய பீடாதிபதி நவாஸ், மட்டக்களப்பு கல்விக் கல்லூரிக்கு பீடாதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து, மட்டக்களப்பு கல்விக் கல்லூரிக்கு முன்பாக தமிழர்கள் சிலர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

மட்டக்களப்பு கல்விக் கல்லூரிக்கு முஸ்லிம் ஒருவர் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டமையை எதிர்த்தே – இவ்வாறு இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்