சாய்ந்தமருது வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாகிறதா: சுகாதார அமைச்சு விளக்கம்

🕔 April 30, 2020

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையினை கொரோனா சிகிச்சை நிலையமாக்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என, சுகாதார அமைச்சு நேற்று புதன்கிழமை தெரிவித்தது.

‘கொரோனா சிகிச்சை நிலையமாக மாறும் சாய்ந்தமருது வைத்தியசாலை’ எனும் தலைப்பில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கல்முனை பிராந்தியத்திலுள்ள இணையத்தளங்கள், பேஸ்புக் பக்கங்கள் மற்றும் வட்ஸ்ஸப் ஊடாக செய்திகள் வெளியாகியிருந்தன.

சுகாதார துறையுடன் தொடர்புடைய எந்தவொரு அரச அதிகாரியினையும் மேற்கொள்காட்டாது இந்த செய்தி வெளியாகியிருந்தது. இதனை அடுத்து பிரதேச மக்கள் மத்தியில் அச்ச உணர்வு தோன்றியமை குறிப்பிடத்தக்கது.

“இவ்வைத்தியசாலையினை ராணுவத்தினர் பொறுப்பேற்பார்கள் எனவும் சிகிச்சை அளிப்பதற்குரியவாறு வைத்தியசாலையினை தயார்படுத்துமாறும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிக்கு சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் இன்று (28) செவ்வாய்க்கிழமை மதியம் தொலைபேசி ஊடாக அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது”  எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நன்றி: விடியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்