ஊரடங்கை மீறியோரை தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸார்: பறிபோனது வேலை

🕔 April 13, 2020

ரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் – வீதிக்கு வந்த நபர்களைப் பிடித்து, தோப்புக்கரணம் போட வைத்த பொலிஸ் உத்தியோகத்தர் இருவர், அவர்களின் தொழிலில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு நேரத்தில் கொழும்பு – டாலி வீதியில் உலவிய சிலரைப் பிடித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர்; அவர்களைத் தோப்புக்கரணம் போட வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி பொலிஸார் இருவர் தொடர்பிலும் மனித ஊரிமை ஆர்வலர்கள் தெரிவித்த விமர்சனங்களை அடுத்து, சேவையிலிருந்து அவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உலக நாடுகள் பலவற்றில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் ஊடரங்குச் சட்டத்தை மீறுவோரை பிடிக்கும் பொலிஸார், அவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது, தரையில் தளழ வைப்பது, முட்டுக்காலில் நிற்க வைப்பது என, பல்வேறுபட்ட தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.

இந்தியப் பொலிஸாரின் பாணியை – இங்கு பின்பற்றிய பொலிஸார், தற்போது அவர்களின் தொழிலில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நன்றி: தமிழன் இணையத்தளம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்