இன்று தொடக்கம், ஐந்து நாட்களுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து ஊரடங்குச் சட்டம்

🕔 April 1, 2020

கொரோனா தொற்று பரவல் சாத்திய வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள – கொழும்பு, களுத்துறை, கம்பஹா, யாழ்ப்பாணம், கண்டி, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அவ்வாறே தொடரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் – இன்று செவ்வாய்கிழமை காலை தற்காலிகமாக நீக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம், இன்று பிற்பகல் 2:00 மணிக்கு மீண்டும் நடைமுறைக்கு வரும்.

அந்த மாவட்டங்களில் – மீண்டும், ஏப்ரல் 06ஆம் திகதி, திங்கட்கிழமை, காலை 6:00 மணிக்குத் தற்காலிகமாக நீக்கப்படும் ஊரடங்குச் சட்டம் – அன்றைய தினமே, மீண்டும் பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்கு வரும்.

அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் தவிர்ந்த வேறு எவரும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் – ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குப் பயணிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்