இவரைக் கண்டால் அறிவியுங்கள்: பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கை

🕔 March 17, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் ஒருவரைக் கண்டுபிடிக்க, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

மேற்படி நபரின் படத்தை பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது காண்பித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இவருடன் இருந்ததாக கூறப்படும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்தநிலையில் குறித்த வெளிநாட்டவர் இன்னும் இலங்கையிலேயே இருக்கிறார் என நம்பப்படுவதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் .

Comments