இலங்கையர் ஐவருக்கு கொரோனா தொற்று: 60 பேர் கண்காணிப்பில்

🕔 March 14, 2020

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், 60 இலங்கையர்களும் வெளிநாட்டவர் இருவரும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் இவர்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக, அரசாங்க தொற்றுநோய் பிரிவின் சிரேஸ்ட நிபுணர் சமித்த குருகே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கும், அவரின் நண்பருக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்ட வைத்தியசாலைகள், அநுரதபுரம் மற்றும் பொரல்லை வைத்தியசாலைகள், ராமக, கம்பஹா, நீர்கொழும்பு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை, குருநாகல் மற்றும் கண்டி வைத்தியசாலைகளில் ஏனைய 62 பேரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 5000 பேர் வரை மரணமாகியுள்ளனர். 117 நாடுகளில் இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. ஒரு லட்சத்து 34ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் மாத்திரம் 3117 பேர் மரணமாகினர். அங்கு 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 ஆயிரம் பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்