தென்கிழக்கு பல்லைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ரத்து

🕔 March 14, 2020

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா ரத்துச் செய்ய்பபட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊடக இணைப்பாளரும், அரசியல் துறைத் தலைவருமான கலாநிதி எம்.எம். பாஸில், அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

கொவிட்19 எனும் கொரோனா வைரஸ் அச்சத்தினை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களை இன்று முதல் (14.03.2020) இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இத்தீர்மானத்திற்கு இணங்க தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினையும் இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆதலால் எதிர்வரும் மார்ச் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா ரத்துச் செய்யப்படுகின்றது எனவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments