நாடாளுமன்ற தேர்தலுக்கான செலவு 750 கோடி வரை அதிகரிக்கலாம்: மஹிந்த தேசப்பிரிய

🕔 March 1, 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 5.5 பில்லியன் ரூபாய் செலவுகள் ஏற்படும் என்றும், ஆனால் தேர்தலில் பல அரசியல் கட்சிகள் போட்டியிட்டால் 7.5 பில்லியன் வரை, செலவு அதிகரிக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய;

தற்போது தேர்தல்களை நடத்துவதற்கு எந்தவிதமான நிதி ஒதுக்கீடுகளும் இல்லை என்றும், இதன் காரணமாக, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும், நிதி ஒதுக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது” என்றும் கூறினார்.

‘2019 நொவம்பரில் நாடாளுமன்றத்தில் கணக்கு சமர்பிக்கப்பட்டபோது, 2020 முதல் காலாண்டில் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த வேண்டிய அவசியத்தை அரசாங்கம் முன்கூட்டியே எதிர்பார்க்கவில்லை.

அத்தோடு அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்பதனால் எதிர்வரும் தேர்தல்களுக்காக – நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்