‘ஐக்கிய மக்கள் சக்தி’ கூட்டமைப்பு உதயம்: முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் இணைவு

🕔 March 2, 2020

ஜித் பிரேமதாஸ தலைமையில் சமஹி ஜனபலவேகய (ஐக்கிய மக்கள் சக்தி) கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை, கொழும்பு – தாமரைத் தடாக அரங்கில் உதயமானது.

நான்கு பிரதான கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றிணைவுடன் இந்தக் கூட்டணி ஆரம்பமானது.

இதில் ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஐக்கிய இடதுசாரி முன்னணி, சிவில் அமைப்புகள் சார்பில் ஜாதிக மஹஜன கட்சி, பிரஜைகள் கூட்ட​ணி சார்பில் அபி புரவெசியோ அமைப்பு, ஊடகவியலாளர்கள் சார்பில் ஜனநாயக ஊடகவியலாளர் அமைப்பு, தொழிற்சங்கங்கள் சார்பில் வெடபிமே அபி அமைப்பு உள்ளடங்கலாக 18 தொழிற்சங்கங்கள், 20 சிவில் அமைப்புகள் இந்த ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர், தமது கூட்டணியுடன் இணைந்து கொண்ட தரப்பினருடன புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

Comments