நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியாகிறது?

🕔 March 1, 2020

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானி நாளை 02ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்படும் என்று, அரசாங்க தரப்புகள் தெரிவித்துள்ளன.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரம், நாடாளுமன்றம் ஒன்றின் நாலரை வருடம் நிறைவடைந்த பின்னர் அதனைக் கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.

அந்த அடிப்படையில் 01 செப்டம்பர் 2015 அன்று தொடங்கிய 08 வது நாடாளுமன்றத்தின் ஐந்தாண்டு பதவிக் காலம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் காலாவதியாகிறது.

இந்த நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் கிடைக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்