காலி, மாத்தறை மாவட்டங்கள் இம்முறை தலா ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை இழக்கின்றன: தேசப்பிரிய தெரிவிப்பு

🕔 February 27, 2020

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்குரிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்கள் இம்முறை மொனராகல மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு வழங்கப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் கூறினார்.

இதன்போது, பொதுத்தேர்தலுக்கான பணத்தை பெறுவதில் சிக்கல் நிலவுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

“தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. எனினும், நாடாளுமன்றத்தைக் கலைத்த பின்னர், அவசர சந்தர்ப்பங்களின் போது, நிதியத்தில் இருந்து நிதி வழங்க முடியும் என அரசியலமைப்பில் காணப்படுகின்றது. எனினும், அவ்வாறு நிதியமொன்று இல்லை. நிதியமொன்று ஸ்தாபிக்கப்படாத காரணத்தினால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் விசேட பத்திரத்தின் ஊடாக ஜனாதிபதி நிதியைப்பெற முடியும்” எனவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்