நாடாளுமன்றில் கடந்த வருடம் உரையாற்றாத உறுப்பினர்கள்: தகவல் அம்பலம்

🕔 February 2, 2020

நாடாளுமன்றில் கடந்த வருடம் நான்கு உறுப்பினர்கள் உரையாற்றவேயில்லை என்கிற விடயம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

இந்திக பண்டாரநாயக்க, ஜனக பண்டார தென்னகோன், சிறிபால கம்லத் மற்றும் துலிப் விஜே சேகர ஆகியோரே, நாடாளுமன்றில் கடந்த வருடம் ஒரு தடவையேனும் உரையாற்றவில்லை.

இதேவேளை, 09 நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஒரு தடவை மட்டும் உரையாற்றியுள்ளனர்.

இவர்களில் இருவர் தமிழர்கள், ஏனையோர் சிங்களவர்களாவர்.

டிஎம். சுவாமிநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் – ஒரு தடவை மட்டும் உரையாற்றிய தமிழர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்