கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 305: உலகளவில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று

🕔 February 2, 2020

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 305 பேர் மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

27 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தாக்கத்தினால் 14 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரில் முதன் முதலாக இனங்காணப்பட்ட இந்த வைரஸ் தாக்கம் இப்போது – அந்த நாடு முழுவதும் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை வந்த சீன பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானமை கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் முழுவதும் சுகமடைந்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளான நோயாளி ஒருவர் உலகில் முதல் தடவையாக முழுவதுமாக சுகமடைந்தமை இலங்கையில்தான் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments