ரஞ்சன் எதுவித குரல் பதிவு இறுட்டுக்களையும் நாடாளுமன்றில் ஒப்படைக்கவில்லை

🕔 January 23, 2020

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, குரல் பதிவுகள் அடங்கிய இறுவட்டுக்கள் எவற்றினையும் நாடாளுமன்றில் ஒப்படைக்கவில்லை என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று வியாழக்கிழமை மன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை மன்றில் உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க, இறுவட்டுக்களை மன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக கூறியிருந்தார். இது தொடர்பிலேயே பிரதி சபாநாயகர் இன்று தமது அறிவித்தலை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் கடந்த சில தினங்களாக வெளியானதை அடுத்து, நீதிபதிகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, பலர் குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகி இருக்கின்றனர்.

Comments