ஐ.தே.கட்சி தேசியப் பட்டியல் உறுப்பினர் ஜயம்பதியின் இடத்துக்கு, சமன் ரத்ன பிரிய நியமனம்

🕔 January 22, 2020

க்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த வெற்றிடத்துக்கு சமன் ரத்னபிரிய நியமிக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜயம்பதி விக்ரமரட்னவின் ராஜினாமா தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன  தனது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதாக நாடாளுமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

ஜனவரி 20ஆம் திகதி முதல் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன விலகியிருப்பதாக ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க இன்று புதன்கிழமை சபையில் அறிவித்தார்.

Comments