விவசாயிகளிடம் அகப்பட்ட 100 வயது ஆமை: வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

🕔 December 29, 2019

நூறு வயதுடையதாக இருக்கலாம் என நம்பப்படும் ஆமை ஒன்றை வயல் வெளியில் இருந்து விவசாயிகள் பிடித்து, வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த ஆமையின் எடை 17 கிலோகிராம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரவித்தனர்.

இந்த ஆமை சுமார் 100 வயதுடையதாக இருக்கலாம் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டனர்.

வில்பத்து தேசிய பூங்காவிற்குள் குறித்த ராட்சத ஆமையை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்