முன்னாள் அமைச்சர் ராஜிதவை, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றும் செயற்பாடு இடைநிறுத்தம்

🕔 December 29, 2019

சிறைச்சாலை வைத்தியசாலைக்கு, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை மாற்றும் செயற்பாடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

லங்கா தனியார் வைத்தியசாலையிலிருந்து ராஜித சேனாரத்னவை கொண்டு செல்வதற்காக வந்திருந்த அம்பியுலன்ஸ், அவரை ஏற்றிச் செல்லாமல் திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னைய செய்தி

ங்கா தனியார் வைத்தியாலையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

லங்கா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை, குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்த நிலையில், அவரை 30ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே, இன்று பிற்பகல் லங்கா வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர் – சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்பான செய்தி: முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விளக்க மறியலில் வைக்க, கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு

Comments