தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல்: ஊடகவியலாளர்களுக்கு செயலமர்வு

🕔 November 13, 2019

– எஸ். அஷ்ரப்கான் –

டகவியலாளர்கள் – தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல் மற்றும் முடிவுகளை வெளியிடுதல் தொடர்பான செயலமர்வு நேற்று செவ்வாய்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மட் வளவாளராக கலந்து கொண்டு, தேர்தல் செய்திகளை அறிக்கையிடுதல், முடிவுகளை வெளியிடுதல் மற்றும் இலங்கை அரசியலமைப்பில் தேர்தல் தொடர்பான சரத்துக்கள், தேர்தல் காலங்களில் ஊடக ஒழுக்க நெறி தொடர்பாக விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலை, கலாச்சார பீட பீடாதிபதி றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டார்.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல்  பணிப்பாளர் எம். ஜவ்பர், பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம். றஷீட் ஆகியோரும் நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டர்.

செயலமர்வின் இறுதியில் பங்குபற்றியவர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர்.

பிறைட் மீடியா நெற்வேர்க் நிறுவனத்தின்  முகாமைத்துவப் பணிப்பாளர் யு.கே. ஜெசீல் மற்றும்  சிலோன் மீடியா போரம் தலைவர் றியாத் ஏ. மஜீட் ஆகியோரின் வழிநடத்தலில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.

Comments