ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, கோட்டாவுக்கு ஆதரவு: மேடையேறி தெரிவித்தார்

🕔 November 8, 2019

ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க, ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பொலநறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார்.

கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொண்ட இந்தப் பிரசாரக் கூட்டத்தில் மேடையேறிய வசந்த சேனநாயக்க, தனது ஆதரவினை கோட்டாவுக்கு அறிவித்தார்.

முன்னதாக, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு சில வாரங்களுக்கு முன்னர் கடிதமொன்றினை எழுதியிருந்த வசந்த சேனநாயக்க, அதில் சில கேள்விகளை எழுதியிருந்தார்.

இதனையடுத்து, அவரை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்குவதாக, கட்சியின் செயலாளர் அறிவித்திருந்தார்.

இலங்கையின் முதல் பிரதம மந்திரி டி.எஸ். சேனநாயக்கவின் பேரனே, வசந்த சேனநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.

Comments