தெற்காக மாறிய வடக்கு: திசைகளை மாற்றிய, அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரிகளின் மற்றுமொரு மோசடியும் அம்பலம்

🕔 November 8, 2019

– அஹமட் –

டக்கு திசையை, தெற்காக மாற்றி – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் செய்துள்ள மோசடியொன்று பற்றி, ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

கம்பெரலிய திட்டத்தின் கீழ் 15 லட்சம் ரூபா செலவில், அட்டாளைச்சேனை அஷ்ரப் பொது விளையாட்டு மைத்தானத்துக்கு வடக்குப் பகுதியில் கிறவல் வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்த வீதி நிர்மாணம் குறித்து விவரிக்கும் பலகையில் ‘தெற்கு வீதி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அதாவது, வடக்கில் வீதியொன்றினை அமைத்து விட்டு, அதற்கு ‘தெற்கு வீதி’யெனப் பெயரிடப்பட்டுள்ளது.

இது தவறுதலாக நடந்த விடயம் இல்லை என்பதே, இங்கு குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

அவ்வாறாயின் அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தின் தெற்கு பகுதியில் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு, வடக்குப் பக்கத்தில் வீதியொன்று நிர்மாணிக்கப் பட்டுள்ளதா என்கிற கேள்வி இங்கு எழுகிறது.

அப்படி செய்வதாயின், உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று, அதனை சட்டரீதியாகவே செய்திருக்க வேண்டும்.

அதனை விடுத்து, வடக்கு வீதியை அமைத்து விட்டு – அதற்கு ‘தெற்கு வீதி’ என்று மோசடியாகப் பெயரிட்டுள்ளமையானது, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் மற்றுமொரு சட்டவிரோத செயலாகும்.

இந்த நிலையில், குறித்த வீதிக்கான அளவுப் பட்டியலை (BOQ – Bill of quantities) வழங்குமாறு கோரி, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் ஒருவர் விண்ணப்பம் ஒன்றினை சுமார் 20 நாட்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்த போதும், இதுவரை அவருக்கு, அந்த ஆவணம் அனுப்பி வைக்கப்படவில்லை.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினரின் இந்த மோசடி குறித்தும், உரிய அதிகாரிகளுக்கு முறையிட – சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்