சஜித் ஜனாதிபதியான பின்னரும் பிரதமராக நீடிப்பேன்: ரணில் தெரிவிப்பு

🕔 October 30, 2019

ஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் பிரதமராக தானே நீடிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான வசந்த சேனநாயக்க; ‘சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாகும்போது அமைக்கப்படும் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவாரா?’ என கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், தான் ஜனாதிபதியானால் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதாக, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இதுவரை எங்கும் உறுதியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments