தேர்தல் செலவு: பொலிஸாருக்கு மட்டும் 66 கோடி ரூபாவுக்கு மேல் தேவை

🕔 October 15, 2019

னாதிபதி தேர்தல் தொடர்பிலான பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு மாத்திரம் 668.2 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் திணைக்களம் இந்த நிதியை சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரியுள்ளதாகவும் அதில் தற்போதுவரை 368.65 மில்லியன் ரூபாவுக்கு அனுமதி கிடைத்துள்ளதகவும் அவர் கூறினார்.

மேலும் இவ்வாறு ஆணைக் குழு அனுமதியளித்துள்ள நிதியில்,  சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு 45.8 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சட்ட விரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்ற பொலிஸாருக்கு தேவைப்படும் நிதிக்கு மேலதிகமாக, தேர்தல்கள் கடமையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள், அவர்களது நலன்புரி நடவடிக்கைகள்,  வாகன வாடகை மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல செலவுகள் தொடர்பில் ஏனைய நிதி தமக்கு தேவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்