நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

🕔 October 18, 2015

Water reservoir - 02
– க.கிஷாந்தன் –

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் எதிர்வரும் காலங்களில் திறக்கப்படவுள்ளதால், தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழையால், நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளன.

இலங்கை மின்சார சபையின் தகவல்களின் படி, நீர்தேக்கங்களின் நீர் மட்டம் 90 வீதம் வரை அதிகரித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதனால் ஒருசில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, மின்சார சபை கூறுகின்றது.

மலையகத்திலுள்ள பிரதான நீர்தேக்கங்களான காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, மேல்கொத்மலை, கெனியன், லக்ஷபான, நவ லக்ஷபான மற்றும் பொல்பிட்டிய போன்ற நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.Water reservoir - 01Water reservoir - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்