உலகில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்; ஐ.நா. அறிக்கை

🕔 October 18, 2015
Poverty - 012லக சனத் தொகையில் 836 மில்லியன் மக்கள் வறுமையில் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டுக்காக இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

7.3 பில்லியன் உலகில் சனத் தொகையில் 12 வீதமானவர்கள் கடும் வறுமையினை எதிர்நோக்கியுள்ளதாக அந்த அறிக்கை விபரிக்கின்றது.

1.25 அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கைப் பெறுமதியில் 170 ரூபா) குறைவான வருமானத்தை பெறுவோர் வறிய மக்கள் என, மேற்படி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கிராம புறங்கள், மலையக தோட்ட தொழிலாளர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பின்தங்கிய கிராமங்கள் மற்றும் தென் பகுதியின் மொனராகலை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம் உட்பட பல பகுதிகளில் வசிப்போரில் கணிசமானோர், குறைந்த வருமானத்தைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்