டொக்டர் ஷாபி வழக்கு விசாரணை: டிசம்பர் மாதம் ஒத்தி வைத்து, நீதிமன்றம் உத்தரவு

🕔 August 9, 2019

டொக்டர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கு விசாரணைகள், டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழம விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

அசாதாரண முறையில் சொத்து சேகரித்தமை, தீவரவாதத்திற்கு உதவியமை மற்றும் கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் இன்று காலை 10 மணியளவில் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தார். 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் குறித்த வழக்கு தொடர்பான 12 பக்க அறிக்கை ஒன்று நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

Comments