பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி

🕔 June 1, 2019

–  பாறுக் ஷிஹான் –

யாழ்ப்பாணம்  பலாலி ராணுவ முகாமுக்குள் குண்டு வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதில் ஒருவர் பலியானதுடன் மற்றுமிருவர்  படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை மாலை குறித்த ராணுவ முகாமில் சிரமதான நடவடிக்கையில் ராணுவ அணி ஈடுபட்டிருந்தது. இதன்போது கல் ஒன்றை நான்கு ராணுவ வீரர்கள் இணைந்து அகற்ற முற்பட்டுள்ளனர்.

அவ்வேளை கல் அருகே புதைக்கப்பட்டிருந்த அமுக்க கண்ணிவெடி எதிர்பாராத நிலையில் வெடித்துள்ளது.

குறித்த வெடி விபத்தினால் சம்பவ இடத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமிருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வெடிச்சம்பவத்தில் பலியான ராணுவ வீரரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ராணுவ பொலிஸாரும் பலாலி பொலிஸ் நிலைய அதிகாரிகளும் விசாரணைகளை இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

Comments