காவிந்தவுக்கு பதிலாக ராஜித: தெரிவுக் குழுவுக்கு நியமனம்

🕔 May 24, 2019

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைகத் தாக்குதல்கள் தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்துக்கு, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணத்துக்காகவே, தான் அந்தத் தெரிவுக்குழுவிலிருந்து விலகுவதாக, காவிந்த எம்.பி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் ராஜித்த நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, தெரிவுக் குழுவின் மேலதிக உறுப்பினராக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸவை நியமிப்பதாகவும் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார்.

Comments