இது தான் சந்தர்ப்பம் நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வாருங்கள்: றிசாட் பதியுதீனுடன், எஸ்.பி பேசிய ‘டீல்’ அம்பலம்
– மப்றூக் –
அரசியலில் கடந்த ஒக்டோபர் மாதம் நடந்த சதியின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்குமாறு அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘டீல்’ பேசிய ஒலிப்பதிவு தற்போது அம்பலமாகியுள்ளது.
எவ்வாறாயினும் இந்த ‘டீல்’ க்கு தான் சம்மதிக்காதமையினால் ஏற்பட்ட கோபத்தை வைத்தே, தற்போது தனக்கு எதிராக எஸ்.பி. திஸாநாயக்க உள்ளிட்டோர் முன்னின்று, நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வந்துள்ளதாக, அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, எஸ்.பி. திஸாநாயக்க பேசிய அந்த ‘டீல்’ இன் ஒலிப்பதிவு தன்னிடம் உள்ளதாக, அமைச்சர் றிசாட் பதியுதீன் ஊடகங்களில் மிகப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அமைச்ச் றிசாட் பதியுதீனுக்கும் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கும் இடையில் சிங்கள மொழியில் இடம்பெற்ற அந்த உரையாடலின் தமிழ் வடிவம் இதுதான்.
எஸ்.பி: றிசாட்
றிசாட்: ஆம் அமைச்சரே…
எஸ்.பி: றிசாட்
றிசாட்: ஆம், கதைக்கிறன்..
எஸ்.பி: பேசக்கூடிய இடத்திலயா இருக்கிறீங்க?
றிசாட்: சொல்லுங்கள்
எஸ்.பி: ஓட வேண்டிய ஓட்டங்களையெல்லாம் ஓடி முடித்து விட்டோம். துமிந்த உட்பட எல்லோரும் முடிவாயிற்று. சின்னச் சின்ன ஆட்களை உள்வாங்கி பிரயோசனம் இல்லை. இதுதான் சந்தர்ப்பம், நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வந்திடுங்கள்.
றிசாட்: ஆஹ்…
எஸ்.பி: பெரிய எதிர்பார்ப்போடு இருக்கிறோம்.
றிசாட்: அப்படியா?
எஸ்.பி: இரண்டு ஜனாதிபதிகளும் ரெடியாக இருக்கின்றனர். இப்ப நீங்கள் வந்து அமர்வது மட்டும்தான் மீதியாக இருக்கிறது.
றிசாட்: ம்ம்ம்…
எஸ்.பி: கொழும்பிலா இருக்குறீங்க?
றிசாட்: சிறிய வேலை ஒன்றுக்காக பயணம் வந்திருக்கிறேன்.
எஸ்.பி: நாளைக்கு… நாளைக்கு…
றிசாட்: இரவைக்கு நின்றுதான் வருவேன். நாளைக்கு பார்ப்பம்…
எஸ்.பி: கொழும்பு வந்ததும் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்.
எஸ்.பி. திஸாநாயக்கவுக்கும், றிசாட் பதியுதீனுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின் ஒலி வடிவம்