தென்கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு, 20 ஆம் திகதிவரை விளக்க மறியல்

🕔 October 7, 2015

Judgement - 01– முன்ஸிப் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் கைதான 13 மாணவர்களையும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும், மேற்படி 13 மாணவர்களும் நேற்று செவ்வாய்கிழமை, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமக்கு பல்கலைக்கழக வளாகத்தினுள் விடுதி வசதிகளைச் செய்து தருமாறு கோரி, கடந்த வியாழக்கிழமையன்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். இதன்போது, பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சேதத்தினை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதேவேளை, பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சேதம் விளைவித்ததாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பல்கலைக்கழக நிருவாகத்தினர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கிணங்கவே, குறித்த மாணவர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் படுத்தியதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ஜெமீல் தெரிவித்தார்.

இது தொடர்பில், தென்கிழக்குப் பல்கலைக்கழ பதிவாளர் எச். அப்துல் சத்தாரிடம் வினவியபோது; பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதமேற்படும்போது, அதுகுறித்து முறையிட வேண்டிய பொறுப்பு பல்கலைக்கழக நிருவாகத்தினருக்கு உள்ளதென்றும், அதனடிப்படையிலேயே குறித்த முறைப்பாட்டை நிருவாகத்தினர் மேற்கொண்டதாகவும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்