16 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், தென் மாகாண சபை உறுப்பினர் கைது

🕔 February 28, 2019

தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினரான ‘ரத்தரன்’ என அழைக்கப்படும் கிரிஷாந்த புஷ்பகுமார என்பவரை, சிறுவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில், அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது சட்டத்தரணி ஊடாக, இன்று வியாழக்கிழமை காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போதே, மேற்படி நபரை கைது செய்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

16 வயதுடைய பெண் பிள்ளைய, மாகாண சபை உறுப்பினர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, அவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments