அலுகோசு பதவிக்கு 45 பேர் விண்ணப்பம்; வெளிநாட்டுப் பிரஜையும் உள்ளடக்கம்

🕔 February 28, 2019

லுகோசு பதவிக்கு இதுவரை 45பலர் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரியவருகிறது.

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டோருக்கு, விரைவில் அந்தத்  தண்டனையை நிறைவேற்றவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனையடுத்து, மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் விண்ணப்பம் கோரியது.

இந் நிலையில் அலுகோசு பதவிக்கு இதுவரை 45 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் வெளிநாட்டுப் பிரஜையொருவரும் விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர், அலுகோசு பதவிக்கு சேர்க்கப்பட்ட இருவர், பயிற்சி பெற்றதன் பின்னர், அந்தப் பதவியிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 1976ஆம் ஆண்டுக்குப் பின்னர், மரண தண்டனை நிலைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை பற்றிய கட்டுரைக்கு: மரணத்தின் கூக்குரல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்