ஏழு பேர், இன்றும் அமைச்சர்களாக நியமனம்

🕔 November 8, 2018

மைச்சர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. அந்த வகையில், இரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் ஐந்து ராஜாங்க அமைச்சர்களும் இன்று  வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதியின்உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பின்வருவோர் நியமனம் பெற்றனர்.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

1. சுசில் பிரேமஜயந்த – பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், நீதி அமைச்சர்

2. பந்துல குணவர்தன – சர்வதேச வர்த்தகம், முதலீட்டு அபிவிருத்தி அமைச்சர்

ராஜாங்க அமைச்சர்கள்

3. அநுர பிரியதர்ஷன யாப்பா – நிதி ராஜாங்க அமைச்சர்

4. சாலிந்த திசாநாயக்க – சுதேச வைத்திய ராஜாங்க அமைச்சர்

5. சீ.பீ.ரத்நாயக்க – போக்குவரத்து ராஜாங்க அமைச்சர்

6. எஸ்.எம்.சந்திரசேன – சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர்

7. லக்ஷ்மன் வசந்த பெரேரா – சர்வதேச வர்த்தக ராஜாங்க அமைச்சர்

நேற்று புதன்கிழமை, சமல் ராஜபக்ஷ மற்றும் எஸ்.பி. திஸாநாக்க ஆகியோர் அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Comments