அட்டையாக இருப்பதை விடவும், வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்: மைத்திரியின் குத்தல் பேச்சுக்கு, மங்கள பதில்

🕔 November 6, 2018

– முன்ஸிப் அஹமட் –

“நான் ஒரு அட்டையாக இருப்பதை விடவும், ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன்” என்று, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தின் ஊடாக, ஜனாதிபதி மைத்திரிக்கு கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும், அவரின் சகாக்களையும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்கிற அர்த்தப்படும் வகையில் ‘வண்ணத்துப் பூச்சி’கள் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றைய தினம் குத்தலாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மங்கள சமரவீர தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கண்ட விடயத்தை பதிவு செய்துள்ளார்.

‘நான் ஒரு அட்டையாக இருப்பதை விடவும், ஒரு வண்ணத்துப் பூச்சியாக இருப்பதை விரும்புகிறேன் ஜனாதிபதியவர்களே’ என்று, தனது ட்விட்டர் பக்கத்தில், மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர், ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டப்படி அங்கீகரித்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பொன்றினை வெளியிட்டபோது, அதனை மங்கள சமரவீர வரவேற்றிருந்தார்.

மேலும், ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான கருத்துக்களையும் மங்கள சமரவீர வெளியிட்டு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: ரணில் விக்ரமசிங்க ஓரினச் சேர்க்கையாளர்: ஜனாதிபதியின் ‘குத்தல்’ பேச்சு குறித்து விமர்சனம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்